Saturday, February 27, 2010

விண்ணை தாண்டி வருவாயா? (நீ என்ன லூசா?)

[நல்லத எதிர்பாக்குரவங்க தயவு செஞ்சு இந்த blog படிக்காதீங்க. கொஞ்சம் கொச்சையான வாசகங்கள் இருப்பதால், சிறுவர்கள் இந்த blog படிக்க வேண்டாம். சிம்பு படத்த பத்தி படிக்க முடிவு பண்ணவங்களுக்கு இந்த blog வர மொழி மோசமா தெரியாது.]

ச்ச... 20 minutes late ஆய்டும் போல இருக்கேனு feel பண்ணிக்கிட்டே போனேன் அந்த படத்துக்கு... ச்ச இன்னும் கொஞ்சம் lateஆ வந்துருக்கலாமோனு feel பண்ண வச்சுட்டானுங்க... இந்த கேவலமான படத்துக்கு நாலு paragraph யோசிச்சு அடிக்குறதுக்கு என்னக்கு mood இல்ல... So ஒரு சின்ன கற்பனை மூலமா விமர்சிக்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்...

[இது முழுக்க முழுக்க கற்பனைதான் நகைச்சுவைக்காக... யாரையும் புன்படுத்தும் நோக்கம் இல்லை...]

Scene 1: [இயக்குனர் கெளதம் படத்ததோட கதைய producer கிட்ட சொல்லுறாரு...]

கௌதம்: சார், யாருமே சொல்லாத கதை ஒன்னு வச்சுருக்கேன்...
தயாரிப்பாளர்: அத நீ சொல்லாத... first கதைய சொல்லு...
கௌ: அமெரிக்கால ஒரு பாட்டு. New Zealand ல செம location ல ஒரு பாட்டு...
: டேய்... மொக்க நாயே... இதுல கதையே இல்லையே டா...
கௌ: இருங்க சார்... கதைக்கு வரேன்... ஒரு அழகான couple love பன்ணி...
த: அங்கயே நிறுத்து... love ல என்ன புதுமையா புகுத்த போற?
கௌ: சார்.. ஒரு ஹிந்து பய்யன் ஒரு christian பொண்ண தொரத்தி தொரத்தி love பண்ணுறான்...
த: டேய் நாதாரி... இத தான் நம்ப 1000 movies ல பாத்துருகோமே...
கௌ: இதுல, அந்த பொண்ணுக்கு நிச்சயம் ஆஹியும் love பண்ணுறான்...
த: இத தானே நீ... "மின்னலே"னு எடுத்த?
கௌ: Oh... Shit... ஏற்கனவே எடுத்துடேனா? OK சார்... அப்ப, அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகியும் love பண்ணுறன் சார் நம்ப ஹீரோ...
த: டேய்... வாய கேளராத டா... அந்த மாறியும் 1000 படம் வந்துடுச்சு...
கௌ: Oh... அப்ப... நிச்சயம் ஆஹிடுச்சு... ஆனா கல்யாணம் நின்னு போஇடுது... இது எப்புடி இருக்கு?
த: வெளங்கல...
கௌ: சார்... என்ன சொன்னாலும் இப்புடியே சொன்னீங்கன்னா... நான் எப்புடுடி அமெரிக்கா போறது... சீ... நான் எப்புடி படம் எடுக்குறது...
த: இன்னும் கொஞ்சம் வித்தியாசம் யோசிக்கலாம்...
கௌ: Idea!!! கல்யாணம் நின்ன பிறகு, அவங்களுக்கு காதல் வரது...
த: உங்க கிட்ட இருந்து நான் இன்னும் கொஞ்சம் எதிர் பாக்குறேன்..
கௌ: hmm... அதுக்கு அப்புறம் அவங்களுக்குள்ள சண்ட வருது... அதுக்கப்புறம் love வருது... அதுக்கு அப்புறம் சண்ட வருது... இப்புடியே எடுத்துகிட்டே இருக்கோம்... மக்கள் எல்லாரும் என்னதான் நடக்கும்னு கொலம்பி போறப்ப திடீர்னு படத்த முடிசிடுரோம்... மக்களும் நல்ல twist னு நம்பி படம் நல்லா இருக்குனு சொல்லிடுவாங்க...
த: நல்ல ஐடியா... ஆனா... still... படம் ஓடும்னு என்னக்கு நம்பிக்க வரல...
கௌ: சார்... சிம்பு திரிஷாவா பல தடவ kiss பண்ணுறாரு...
த: அதுக்கு நான் என்ன பண்ணுறது?
கௌ: சார்... நான் நம்ப படத்துல சொல்லுறேன்...
த: ஓ... ஒகே ஒகே... but kiss எல்லாம் சாதாரண விஷயம் ஆஹிடுச்சே...
கௌ: இல்ல சார்... எல்லா படத்துலயும், love பண்ணுவாங்க அந்த சாக்குல எல்லாம் பண்ணுவாங்க... இந்த படத்துல, friends friends னு சொல்லகிட்டே எல்லாத்தையும் பண்ண வச்சுடுவோம்...
த: மக்கள் செருப்பால அடிக்க மாட்டாங்க?
கௌ: அதுக்கு என் கிட்ட ஒரு super idea இருக்கு... நாமலே ஒரு பத்து பெற theatre ல செட் பன்ணி... "wow... what a movie... Only 'A' class people will like this kind of gem... 'B' class and 'C' class wont understand this" னு சொல்லுவோம்... பாக்குறவங்க "ஒரு வேல படம் நல்லா இல்லன்னு சொன்னா நம்பள 'B' 'C' னு சொல்லிடுவாங்க" னு நெனைச்சு super னு சொல்லி படத்த ஓட்டிடுவாங்க...
த: super idea கௌ... but அது போதுமா?
கௌ: அடிகடி heroவ fucking fuck னு சொல்ல வச்சு அதை நம்பலே மறைக்க try பண்ணுற மாறி build up கொடுத்து கலகிடுவோம்... அது மட்டும் இல்ல... 'I want to make love with you' னு சொல்லுவோம்... எப்புடி?
த: அதத்தான் 'வல்லவன்' படத்துல try பன்ணி கடும் செருப்படி வாங்கியாச்சே?
கௌ: ஓ... சரி... 'I want to make love with you always... till I am 80' 'I want to touch you' 'I want to feel you'னு சொல்லுவோம்... அப்ப அப்ப அதை Sceneலயும் முடிஞ்ச அளவுக்கு காட்டுவோம்... எப்புடி?
த: அட்டஹாசம்!!! இப்புடி எல்லாம் பண்ணா 'A' class ல படம் பிச்சி கிட்டு ஓடும்... ஒடனே படத்த எடுபோம் வாங்க...

இப்புடின்னு படத்த எடுத்து the so called movie critics கு புடிகுரமாரி friends friends னு சொல்லிகேட்டே தடவுறது... kiss பண்ணுறதுனு எடுத்து படத்த பாத்தா, படம் 1 hour 30 minutes தான் வந்துச்சு... so, இன்னோரு meeting போட்டாங்க..

Scene 2:

த: படத்துல பல பாட்டு இருந்தும் படம் கொஞ்சம் நேரம்தான் வந்துருக்கு... என்ன பண்ணுறது?
கௌ: சார்... இதுக்கு மேல படத்த கொலப்பவே முடியாது... I can't do anything more...
த: ஆனா படம் at least 2 hours 40 minutes இருக்கணுமே...
[கௌ மொகத்துல ஒரு புன்னகை...]
கௌ: சார்... ஒரு super idea...
த: சொல்லி தோல...
கௌ: படத்த அப்புடியே slow motion ல ஓட்டுவோம்... கொஞ்சம் பெருசாஹிடும்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா... படத்த slowவா ஓட்டுனா ஒரு classic movie build-up வந்துடும்... எல்லாரும் 'wow what a classic movie'னு சொல்லிடுவாங்க...
த: super கௌ...
[அப்புடீன்னு try பன்ணி பாத்தாங்க... படம் 2 hours 20 minutes தான் வந்துச்சு...]
கௌ: one more idea sir... ஒவ்வொரு டயலாக்ளையும் ஒவ்வொரு sentence கு பிறகும் ஒரு 10 seconds கேப் குடுப்போம்... hero and heroine அப்புடியே feel பண்ணுற மாறி build-up ஆஹிடும்...

[அப்புடி try பன்ணி ஜவ்வு மிட்டாய் மாறி இழுத்து படத்த பெருசாகிட்டனுங்க... ஆனா producer கு படம் புடிக்கல... so...]

Scene: 3

: இப்புடியே படத்த உட்டா... அந்த TV ல "விண்ணை தாண்டி வருவாயா... theatre ஐ விட்டு ஓடுவாயா"னு ஓட்டிடுவானுங்களே...
கௌ: சார்.. அதுக்கு ஒரே ஒரு idea தான் இருக்கு... அவங்க குடும்பத்திலேயே ஒருத்தர வாங்க வச்சுட்டோம்னா??? படம் super... அட்டஹாசம் னு சொல்லி ஓட வச்சுடுவாங்கல்ல? அது வேற இல்லாம... சிம்புவும் திரிஷாவும் நல்லா நடிக்க try பண்ணிருக்காங்க... locationனும் காமெராவும் நல்லா வந்துருக்கு... எப்புடியாவது படத்த ஓட்டிடுவாங்க சார்... கவலை படாதீங்க...

அப்புடீன்னு படம் தயாராஹி வந்துடுச்சு... நீங்க ஒரு வீரர்/வீராங்கனை நா படத்த பாத்துட்டு உங்க கருத்த comment ஆ சொல்லுங்க... நன்றி...