Wednesday, May 18, 2011

போடான்... கோ

 ஐயோ... தப்பா எடுத்துகாதீங்க... டான்னு போங்க 'கோ' படத்துக்குன்னு சொல்றததான் கொஞ்சம் சுருக்கி அப்புடி title வச்சுட்டேன்... எவ்வளவோ கேவலமான படத்துக்கு கஷ்டப்பட்டு blog எழுதுறோமே, ஒரு நல்ல படத்துக்கு எழுதலாம்னு தான்... சரி... விமர்சனத்துக்கு கோவோம்... sorry ... போவோம்... வளவளன்னு மொக்கைய போடாம சுருக்கமா எழுதிடுறேன்...

படத்தில் மிகவும் பிடித்தது:
  • ஜீவாவின் நடிப்பு... ரொம்ப நல்லா நடிச்சிருக்கார்... இயல்பா அலட்டமா நடிச்சிருக்கார்.
  • விறுவிறுப்பான திரைக்கதை... சும்மா heroine அ impress பண்றதுக்கு வளவளனு மொக்கைய போடாம, கதைக்கு தேவையான situation ஓட வரது ரொம்ப புதுமை...
  • படத்தோட நடுவுல illogical ஆ இருக்குற விஷயங்கள் பின்னாடி புரியுறது நல்லா இருந்துச்சு
  • என்னமோ ஏதோ பாடல்!!
பிடித்தது:
  • இடைவேளைக்கு பிறகு ஒரு அஞ்சு நிமிஷம் thriller movie மாறி திகில கொடுத்தது super
  • பியா வ கடைசி வரைக்கும் casual ஆ காட்டுனது. ஜீவா பியாவ love பண்ணலன்னு சொன்னோன 'இல்ல நான் உன்ன தான் love பண்ணுவேன்' னு மொக்கைய போடாம move on பண்ணது good.
  • கார்த்திகா dinner போலாமானு கேட்ட ஒடனே ஜீவாவோட  படபடப்பு and the entire scene in the hotel reminded me of my story in my blog.
  • எதிர் கட்சி தலைவரோட வில்லத்தனமான comedy சூப்பர்...
  • Adult comedies அ  கூட ரொம்ப கொச்சையா சொல்லாம ரசிக்கும் படி சொன்னது.
பிடிக்காதது:
  •  முதல் 10 நிமிஷம் ஹீரோ ஓட intro... Bike ல முன்னாடி பின்னாடி wheeling பண்ணி சாகசம் பண்றது... 
  • என்ன பிரச்சனை நடந்தாலும் traffic அது பாட்டு freeya move ஆறது கொஞ்சம் முகம் சுளிக்க வச்சுது. [Especially, even after a bomb blast, the traffic was shown to move freely]
  • கொள்ளை அடிச்ச அடுத்த நிமிஷமே எல்லாரும் முகமூடிய கழட்டி சிரிச்சு pose குடுக்குறது கொஞ்சம் இடிக்குது...
ரொம்ப கடிய கிளப்பிய விஷயங்கள்:
  • கார்த்திகா வின் நடிப்பு... I mean , நடிகவே இல்லாதது... ஆனா நல்லவேளையா அதிக நேரம் நடிக்க chance தரள... அது வரைக்கும் ok தான். First படம் கிறதால  மன்னிச்சிடலாம்...
  • ஒரு முக்கியமா கதாபாத்திரம் இறந்த ஒடனே ஒரு duet... அதுவும் அந்த duet start ஆற முன்னாடி ரெண்டு பெரும் சிரிச்சிகிட்டே duet குள்ள போறது செம கடி... [இப்ப தான டா அழுதுகிட்டு இருந்தீங்க... அதுக்குள்ள duet னா இளிப்பு வருதா? அப்புடீன்னு கேக்க தூணுது...]
  • "என்ன நடந்துச்சுன்னு சொல்லு" அப்புடின்னு கேட்ட ஒடனே ஒரு பாட்டு... flashback நாளே பாட்டுத்தான் ஆரம்பிகனுமா? ஒரு படத்துக்கு அஞ்சு பாட்டுங்கர rules அ ஒழிச்சிட்டா ரொம்ப நல்லா இருக்கும்... இதுனாலேயே ஒரு படம்னா atleast ரெண்டு மொக்க பாட்டு இருக்குது... அதுக்காக ஒரு 10 நிமிஷம் மொக்க வேற... But this movie is much better to handle this 5-song-per-movie rule
என்னக்கு என்னமோ இந்த படம் ரொம்ப புடிச்சிருந்துச்சு... Company இருந்தா இன்னொரு தடவ கூட போய் பாக்கலாம்னு இருக்கேன்... So, நீங்க இன்னும் இந்த படத்த பாக்கலேன்னா கண்டிப்பா போய் பாருங்க... பாத்துட்டு உங்க கருத இங்க பரிமாறுங்க...