
படத்தில் மிகவும் பிடித்தது:
- ஜீவாவின் நடிப்பு... ரொம்ப நல்லா நடிச்சிருக்கார்... இயல்பா அலட்டமா நடிச்சிருக்கார்.
- விறுவிறுப்பான திரைக்கதை... சும்மா heroine அ impress பண்றதுக்கு வளவளனு மொக்கைய போடாம, கதைக்கு தேவையான situation ஓட வரது ரொம்ப புதுமை...
- படத்தோட நடுவுல illogical ஆ இருக்குற விஷயங்கள் பின்னாடி புரியுறது நல்லா இருந்துச்சு
- என்னமோ ஏதோ பாடல்!!

- இடைவேளைக்கு பிறகு ஒரு அஞ்சு நிமிஷம் thriller movie மாறி திகில கொடுத்தது super
- பியா வ கடைசி வரைக்கும் casual ஆ காட்டுனது. ஜீவா பியாவ love பண்ணலன்னு சொன்னோன 'இல்ல நான் உன்ன தான் love பண்ணுவேன்' னு மொக்கைய போடாம move on பண்ணது good.
- கார்த்திகா dinner போலாமானு கேட்ட ஒடனே ஜீவாவோட படபடப்பு and the entire scene in the hotel reminded me of my story in my blog.
- எதிர் கட்சி தலைவரோட வில்லத்தனமான comedy சூப்பர்...
- Adult comedies அ கூட ரொம்ப கொச்சையா சொல்லாம ரசிக்கும் படி சொன்னது.

- முதல் 10 நிமிஷம் ஹீரோ ஓட intro... Bike ல முன்னாடி பின்னாடி wheeling பண்ணி சாகசம் பண்றது...
- என்ன பிரச்சனை நடந்தாலும் traffic அது பாட்டு freeya move ஆறது கொஞ்சம் முகம் சுளிக்க வச்சுது. [Especially, even after a bomb blast, the traffic was shown to move freely]
- கொள்ளை அடிச்ச அடுத்த நிமிஷமே எல்லாரும் முகமூடிய கழட்டி சிரிச்சு pose குடுக்குறது கொஞ்சம் இடிக்குது...
- கார்த்திகா வின் நடிப்பு... I mean , நடிகவே இல்லாதது... ஆனா நல்லவேளையா அதிக நேரம் நடிக்க chance தரள... அது வரைக்கும் ok தான். First படம் கிறதால மன்னிச்சிடலாம்...
- ஒரு முக்கியமா கதாபாத்திரம் இறந்த ஒடனே ஒரு duet... அதுவும் அந்த duet start ஆற முன்னாடி ரெண்டு பெரும் சிரிச்சிகிட்டே duet குள்ள போறது செம கடி... [இப்ப தான டா அழுதுகிட்டு இருந்தீங்க... அதுக்குள்ள duet னா இளிப்பு வருதா? அப்புடீன்னு கேக்க தூணுது...]
- "என்ன நடந்துச்சுன்னு சொல்லு" அப்புடின்னு கேட்ட ஒடனே ஒரு பாட்டு... flashback நாளே பாட்டுத்தான் ஆரம்பிகனுமா? ஒரு படத்துக்கு அஞ்சு பாட்டுங்கர rules அ ஒழிச்சிட்டா ரொம்ப நல்லா இருக்கும்... இதுனாலேயே ஒரு படம்னா atleast ரெண்டு மொக்க பாட்டு இருக்குது... அதுக்காக ஒரு 10 நிமிஷம் மொக்க வேற... But this movie is much better to handle this 5-song-per-movie rule

என்னக்கு என்னமோ இந்த படம் ரொம்ப புடிச்சிருந்துச்சு... Company இருந்தா இன்னொரு தடவ கூட போய் பாக்கலாம்னு இருக்கேன்... So, நீங்க இன்னும் இந்த படத்த பாக்கலேன்னா கண்டிப்பா போய் பாருங்க... பாத்துட்டு உங்க கருத இங்க பரிமாறுங்க...